பயணம்

காத்திருப்பேன் என்றாய்
நீ
நானும் காத்திருந்தேன்
உன்னுடன்
கடற்கரையில் முட்டாய்
சாப்பிட
நானும் காத்திருந்தேன்
உன்னுடன்
கைகோர்த்து மழையில்
நனைய
நானும் காத்திருந்தேன்
உன்னுடன்
காலமுழுதும் என்
இதயத்தில் சுமக்க
ஆனால்
இன்றுதான் - புரிந்துக்கொண்டேன்
நீ எனக்காக
காத்திருப்பது - என்
மணவரையில் - அல்ல
கல்லாறையில் என்று

எழுதியவர் : ஸீயாஉல் ஹஸன் (6-Jun-13, 10:16 am)
சேர்த்தது : பிஸ்மி
Tanglish : payanam
பார்வை : 86

மேலே