வெற்றிட வேர்
வெற்றிடங்களின்
வேரில்
மனம் காய்க்கிறது....
தேகம் கடந்தவன்
தேராகிறான்..
காற்றின் கைகளில்...
உண்டென்று
சொல்வதில்
இலையில் பறக்கிறது
எறும்பின் பால்வெளி....
இல்லாத படகில்
இருக்கத்தான் செய்கிறது
ஆவியான நீர் கொஞ்சம்....
எதுவும் சரியல்ல
என்பதில் ஒளிந்திருக்கும்
ஒரு சரியில்
மெல்ல சரிகிறது
காண்பது......
அற்ப மாயை
எதுவென தேடினேன்..
ஆள் உயரத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது
எனை அல்லாத
கண்ணாடி.....