ஒளிப்புள்ளிகள்!
* இருட்டறையின்
கருப்புச் சுவற்றுக்குள்
சிக்கிக்கொண்ட
ஒளிப்புள்ளிகள்!
* ஜன்னல் கம்பிகளை
சிறைக்கம்பிகளாய்
மாற்றிய கள்வர்களின்
நடுவில் மாட்டிக்கொண்ட
“கவரிமான்”!
* இவர்கள்
மெழுகுவர்த்திகள்!
சமூகத்திற்க்காக
தங்களை கைதிகளாக
மாற்றிக்கொண்டு
கண்ணாடிக் கூண்டுக்குள்
பிரகாசிக்கும் “ஒளிச்சுடர்கள்” !
* இவர்கள்
மலர்களாம்
மற்றவர்களுக்கு
வாசம் தரும் வரை!
* “புதுமைப்பெண்களாய்”
மாறுங்கள் என்று
எங்கள் மீசைக்கவிஞன்
பாடிவைத்தான்!
* அவன் பாடியது
அன்றும் கேட்கவில்லை!
இன்றும் கேட்கவில்லை!
* இன்னும் எத்தனையோ
“புதுமைப்பெண்கள்”
மின்மினிப்பூச்சிகளாய்
இருட்டறைக்குள்!
* அவர்கள்
இருட்டறையின்
கருப்புச் சுவற்றுக்குள்
சிக்கிக்கொண்ட
ஒளிப்புள்ளிகள்!