சிதைக்கப் பட்ட கவிதைகள்......!
புதுமைப் பெண் என்றான்
புலியை விரட்டினாள் என்றான்
கிள்ளை அழகென்றான்
முல்லை சிரிப்பென்றான்
அன்னை பாரதமென்றான்
அழகு நதிகள் பெண் என்றான்
ஆணின் வெற்றிக்குப் பின்னால்
அறிவார்ந்த அணங்கு என்றான்
அத்தனையும் கேட்கையிலே
அகம் மகிழ்ந்தே போனதடி......
அன்றொரு நாள் ஓடும் பஸ்ஸில்
அவள் கற்பு சிதைந்ததடி.....
அழுகுரலும் அடங்கிடவே
அவயங்கள் சிதைந்திடவே.....
பெண் மீது மரியாதை
புதையுண்டு போனதடி........
ஏட்டிலும் மொழியிலும்
ஏற்றமிகு பெண் என்பான்....
விளக்கணைத்த பின்னர் அனைவரும்
விலைமாது என்பான்....
சுட்டெரிக்க வேண்டுமடி - இவர்கள்
உடலை விட்டு திமிர் அதனை......!!!!