சூரியனை ஆராய செயற்கைக் கோள் அனுப்பும் நாசா - ரொம்ப முக்கியம்..?!
பூமி அதி வெப்பம் அடைந்து வருகிறது, சுற்றுச்சூழல் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குப்பை கிடங்காக மாறி வருகிறது. காடுகள் சூறையாடப்பட்டு வருகின்றன. அட இவை கூட விட்டுவிடுவோம்...உணவு கிடைக்கவில்லை ஆசிய மக்களுக்கு, ஊட்டச் சத்து குறைவில் குழந்தைகள் பலியாகின்றன, உலகெங்கும் புதுப்புது நோய்கள் உருவாகி வருகின்றன.
பசியால் மனித இனம் அழிந்து கொண்டு வருகிறது.
இவர்கள் என்னடாவென்றால் ஒன்று டைனோசர் முட்டையை தேடி அலைகிறார்கள், டைனோசர் விட்டைகளையும் தேடி அலைய கோடிக்கணக்கில் ரூபாய்களை கொட்டி அழிக்கிறார்கள். மறுபுறம் செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்று போய் பார்ப்பதற்கு கோடிக்கணக்கில் டாலரை கொட்டி அழிக்கிறார்கள், ஆமாம்... பழைய ஆறு ஒன்று செவ்வாயில் இருந்தது என்று கூறி கோடிக்கணக்கில் ரூபாய்களை கரியாக்கி சொல்கிறார்கள்.
தற்பொழுது ஜூன் 26 - ம் தேதி விண்ணில் செலுத்த உள்ள ராக்கெட் அமெரிக்காவின் இன்டர்பேஸ் ரீஜன் இமேஜ் பூதக்கண்ணாடி எனப்படும் செயற்கைக் கோளை தயாரித்து சூரியனில் இருந்து 100 முதல் 150 மைல்கள் தொலைவில் இருந்து இந்த செயற்கைக் கோள் படம்பிடிக்க உள்ளதாம்.
உலக நாடுகளில் சுரண்டியும் கொள்ளையடித்தும், ஏமாற்றியும் எண்ணவே முடியாத பணத்தைத் தான் இப்படி கொட்டி அழிக்கிறார்கள் அமெரிக்க கார்ப்பரேட்களின் அரசுகள் என்றால் யாராவது மறுக்க முடியுமா...? என்ன.
சங்கிலிக்கருப்பு