நாளைய பாரதம் அதிமுக கையில் - ஜெ...! அதற்கு பிறகு மக்கள் கையில்...?!

தமிழ் நாட்டில் உள்ள பல திராவிட காட்சிகளில் இருந்து, தேசியக் காட்சிகளில் இருந்து விலகி சுமார் ஒரு 1,478 புதிய உறுப்பினர்களை ( புதிய அடிமைகளை ) வாழ்த்தி பேசினார் இவ்வாறு முதல்வர் அவர்கள்.

அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து, நமது லட்சியம் உயர்வானது, நமது பார்வை தெளிவானது. நமது வெற்றி முடிவானது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நாளைய பாரதம் நம் கையில் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பிறகென்ன, பாரதம் அதிமுக கையில் வந்தவுடன் மக்கள் அனைவரும் தயாராகி விடுவார்கள். மக்கள் கைகளில் பாரத நாடு வந்தால் என்ன என்ற கேள்வியுடன்..

பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் கீழ் வேலை பார்த்த அடிமைகளிடம் சுதந்திரத்தை கொடுத்து விட்டு, இவ்வாறு கூறினார்களாம். கவனமாக ஆட்சி செய்யுங்கள்...
ஒருபோதும் மக்கள் நலன், மக்கள் ஆட்சி, மக்கள் அதிகாரம் என்று சிந்தித்து விடாதீர்கள்..நாங்கள் எவ்வாறு ஆட்சி செய்தோமோ அதில் இம்மி அளவு கூட பிசகாதீர்கள் என்று.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Jun-13, 4:48 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே