போடா,போடி!!!

அவள் :-
நீ மட்டும் எனக்கு கணவனா வந்தா
கொஞ்சம் கூட பாவம் பார்க்கம
நீ குடிக்கிற காபியில விஷம் கலந்து கொடுத்துடுவேன்
*******
அவன் :-
நீ மட்டும் எனக்கு மனைவியாய் வந்தா
நீ விஷம் கலந்த காப்பிய உன்னையே குடிக்க வைப்பேன்
*******
அவள்:-
ஆளப்பாரு பெரிய அஜீத்குமார் என நினைப்பு
ஆளும் மூஞ்சும் கோபத்த கிளப்பாம போயிடுடா
*******
அவன்: :-
ஆமா ஆமா நீ அப்படியே ஐஸ்வர்யாராய் பாரு
சொல்ல வந்துட்டா என்ன
உன் முகத்த முதல்ல கண்ணாடில போய் பாரு போடி
****************************************************************************
எதிர் காலம்
ஏது என்றறியாமல்
எலியும் பூனையுமாய்
அவனும் அவளும்,!!

கன்னித் தீவென
முடிவுரை இல்லா
தொடர் கதையாய்
அத்தியாய தேவையாய்
தொடந்து கொண்ட
பொய் சண்டைகள்!!

இவர்களுக்கான புறதொலைவு
அதிகரித்த பொழுதெல்லாம்
நாழிகைகள் கூட
நகர மறுத்து
நரக வேதனையளித்து.,

இவர்களுக்கான இதய
தொலைவுகள் சுருங்கத்
தொடங்கிய வினோதமான
ஆச்சரிய சமயங்கள்!!!

அதையே ஆதயமாய்
கொண்டு வெளியில்
அப்பட்டமாய் வெறுப்பதாகவும்,
உள்ளுக்குள் ரசித்தபடி
ஒருவரை மாற்றியொருவர்!!!

வறட்டு கௌரவம்
வாய் பேச
முடியாமல் தடுத்திட,
மெல்லவும் முடியாது
முழுங்கவும் முடியாது
விழி பிதுங்கி
முழித்த சமயங்கள்!!!

இவர்கள் இருவரும்
ஒருவருக்காய் மற்றொருவர்
என பிறப்பெடுத்த
ரகசியத்தை புரிந்து
கொண்ட பெரியவர்கள்
பேசி முடித்திட,

மறுப்பேதும் சொல்லாமல்
மௌனமாய் இருவரும்
மனம் மகிழ்ந்தபடி
மணம் செய்து
கொண்டனர்!!!

முதலிரவு அறையில்
பால் குவளையோடு
அவள் அறை
நுழைந்த அக்கணம்.,
****************************************************************************
அவன்:-
விஷம் கலந்துட்டியா?

அவள்:-
இல்ல டா

அவன்:-
ஏன் டீ?

அவள்:-
உனக்கு மரண
தண்டனை சரிவராது
டா மாமா

ஆதலால் ஆயுள்
தண்டனை அளிக்கிறேன்

மரணிக்கும் வரை
என்னோடு சேர்ந்து
வாழ வேண்டும்
என்று தீர்ப்பை
மாற்றிவிட்டேன்
டா செல்லம்

பொய்யாய்
போடா போடி,

உண்மையில்
வாடா வாடி!!!

****************************************************************************
ஊடல் இல்லா
காதல் காற்று
நிரம்பிடா பலூன்
போன்றல்லவா சுருங்கி
போய் காணப்படும்

ஊடல் நிறைந்த
காதலோ காற்று
நிரப்பிய பலூன் - என

பரந்து விரிந்து
உல்லாசமாய் உயர்ந்தல்லவா
பறந்திடும்

ஊடலுக்கும் உண்மை
சண்டைக்கும் உள்ள
வேறுபாட்டை உணருங்கள்

காதலுக்கு ஊடலே
உகந்ததென கொண்டாடுங்கள்!!!

அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (7-Jun-13, 3:03 am)
பார்வை : 829

மேலே