என் உயிர் தோழியோடு விளையாட 555

தோழியே...

என் முகம் பார்த்து
பசி அறிந்து...

மழலைபோல்
சோறூட்டினாய்...

என் கண்கள்
அழுதபோது...

உன் கரம் கொண்டு
கண்ணீரை துடைத்தாய்...

சோகம் என்றபோது
உன் தோல் தந்தாய்...

விண்ணை தொட
நினைத்த போது...

உன் கரம்
கொடுத்தாய்...

மழை மேகம் என்னை
நனைத்தபோது...

உன் தாவணியால் என்
தலை துடைத்தாய்...

காதல் காயங்கள் பல
தந்தபோது...

உன் கண்ணீரால் என்
காயங்களை ஆற்றினாய்...

கடல் கடந்து
பயணிக்கும் போதும்...

உன் களங்கமில்ல அன்பு
என்னோடு கரம் கோர்த்து...

நடைபோடுகிறது எனக்கு
துணையாக...

உன் முகம் பார்க்கும்
ஒவ்வொரு வினாடியும்...

கோடி மின்னல்கள்
என்னில்...

என் தோழியே...

உன் விழிகளை
பார்த்து பேச...

உன்னோடு ஊடல்
கொள்ள...

நாளை
வருகிறேன் நான்...

நேரில் உன் கைகோர்த்து
விளையாட.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Jun-13, 7:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 284

மேலே