முதல் வகுப்பு மாணவனின் முடியாத சோகம்

முடிந்துவிட்டது
இன்றுடன்...
விடுமுறை மட்டுமல்ல
விரைந்துசென்றது
என்
மகிழ்ச்சியும் கூட...
புத்தகத்தின் மேலே
புரண்டு எழுந்து
புழுவாய் துடித்து
புற நட்புகள்
ஏதுமின்றி
அகப்படப்போகிறேன்
ஓர்
கூண்டினிலே ...
சுமைதாங்கியாகி
சுரண்டி விட்டனர்
என்
சுதந்திரத்தை ...
காத்திருக்கிறேன்
கவலையாக
மறு விடுமுறை
எப்பொழுது
என்று?