தளிர்க்கும் காட்டின் தனிமரம்

சுற்றிலும்பெரும் நீருண்டு
சூரியஒளியும் சுற்றுவதுண்டு
சுழல் காற்றும் கூட இங்குண்டு
சுழற்றுபவன் நிறுத்தி விட்டால்?
சிக்கிவிட்டு சாவோம் அன்று !!!!!

பிண்டத்தினுள் அமர்ந்திருப்பான்
பரிணாமம் தோற்று விப்பான்
பசுஞ்சோலை சமைத்து வைத்தான்
பசியாற்றி வாழாமல்-இங்கே
பகைமை கொண்டே வாழ்கின்றோம்!!!!

அடிமை எண்ணம் பலவுண்டு
அதை களையும் வழியுமுண்டு
ஆராய்ச்சி செய்யாமல் --அற்ப
ஆசையோடே வாழ்கிறோம்
அரைகுறையாய் வேகிறோம் !!!!!

விந்தைகள் பல இங்குண்டு
விஷயங்களும் அதிலுண்டு
விம்மி அழுது எதைகண்டோம்
விண்ணையும் சற்று ஆராய்வோம்
விதிகளை இனி நாம் அமைப்போம் !!!!!

காலம் பல கழிவதுண்டு
கற்கண்டும் கசப்பதுண்டு -அன்று
கண்ணீர் விட்டு என்ன பயன் ?
கண்ணை மூடி உள்ளே கடந்தால்
காட்சிகள் எல்லாம் மாயைஅங்கே !!!!

திக்குகள் எட்டிலும் இருந்தாலும்
திகட்டாமல் தேடி அலைந்தாலும்
திகம்பரனை காண நம்முள் செல்வோம்
தளிர்க்கும் காட்டினில் தனி மரம்போலே
தனக்குள் தனியாய் பயணித்திடுவோம் !!!!!


அன்புடன்
கார்த்திக்

**********************************************************************
ஊக்கம் தந்து எழுத தூண்டிய நண்பர் பிரதீபுக்கு
எனது நன்றிகள் ....இது தலைப்பு தந்து எழுத தூண்டும் வாரம் ஹா ஹா ஹா .....
**********************************************************************

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (11-Jun-13, 6:25 pm)
பார்வை : 185

மேலே