இது தான் நான்
எனக்கு பகிர்வுகள் பிடிக்காது,
ஏனெனில் என் பகிர்வுகளை யாரும் நேசிப்பது கிடையாது...
எனக்கு கனவுகள் பிடிக்காது,
ஏனெனில் என் கனவுகளுக்கு கூட என்னை அழகாய் காட்ட தெரியாது....
எனக்கு உறவுகள் பிடிக்காது,
ஏனெனில் அவர்களுக்கு என்னை பிடிக்காது....
இருந்தும் எனக்கு தற்கொலை செய்ய பிடிக்காது,
ஏனெனில் ஏதோ ஓர் வெற்றியை தேடும் என் பயணத்தில்,
முடிவு கிடையாது...