எதிரில் நண்பன்

எந்திரிக்கும் எதிரி தான்
நட்புக்குப் பக்கம்
சுதாரித்த நண்பனே
பகை மூண்ட புகை.

எதிரில் தெரிபவன் எதிரி
எளிதில் தெரியாதவன் நண்பன்.
எளிதில் தெளிபவன் எதிரி
தெளிவில் எதிர்ப்பவன் நண்பன்

என்னை உருவாக்குபவன் எதிரி
என்னில் உருவாகுபவன் நண்பன்
தன்னில் நிலைப்பவன் எதிரி
என்னில் நிலைப்பவன் நண்பன்

எதிர்ப்பைக் காட்டுபவன் எதிரி
பகையை மறைப்பவன் நண்பன்
எதிர்த்து வாழ்பவன் எதிரி
எதிர்க்க வாழ்பவன் நண்பன்

எட்டி எறிபவன் எதிரி
ஒட்டி உறிபவன் நண்பன்
தட்டிக் கழிப்பவன் எதிரி
தட்டில் கழிப்பவன் நண்பன்.

எதிரிக்கு எதிரி நண்பன்
நண்பனுக்கு நண்பன் எதிரி
எதிரே நிற்க வைத்துப் பார்க்க
நண்பனைக் கூட எதிர்க்கலாம்.

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (12-Jun-13, 2:56 pm)
சேர்த்தது : roohulrazmi
Tanglish : ethiril nanban
பார்வை : 374

மேலே