என் அம்மா

நாலாவது படிக்கற வரைக்கும்...
நல்லதனமா இருந்த - நீ

வாசலக்கு போனாலே திட்டுவியே
பொத்தி பொத்தி வளத்தியே!!!
புத்தி சொல்ல ஆளில்லையே - இப்போ

சட்ட போடாம இருந்தா!!!
திட்டுவியே - அப்போ!!!
சேலை கட்ட மாட்டிங்கறியே - நீ

எப்படி கேப்ப? - இத உன்கிட்ட
சந்தோசமா சிரிப்பு வருதுமா...
என்னோட சரட்ட - நீ

போட்டுருக்கும்போதேல்லாம்...

கரு சுமந்த நீ - என்னோட
சட்டையும் சுமக்கரையே இப்போ !!!

சந்தோசமா சிரிப்பு வருதுமா...
நெஞ்சுக்குள்ள இருக்கற - எனைய
காட்டும்போதெல்லாம்...


















நிஜ வாழ்வில் என் அம்மா இப்படிதான்...

எழுதியவர் : கோபி Thiruananth (12-Jun-13, 1:45 pm)
பார்வை : 108

மேலே