தாய் சேய்

*சுமையும் சுகம் தான்
உன்னை கருவில்
சுமக்கும் போது
*உன் அழுகையும்
சுகம் தான் நீ
பிறந்த போது
*உன்னை சுமப்பது
சுகம் தான் நீ தோளில்
இருக்கும்போது
*அடியும் உதையும்
சுகம் தான் நீ என்னை
அடித்து உதைக்கும் போது
*உன் குரல் கேட்பது
சுகம் தான் அது
புரியாமல் இருக்கும்போது
*உன்னை காண்பது
சுகம் தான் நீ
தத்தி தவழும்போது
*உன் கையில் கிறுக்கிய
கிறுக்கல்கள் சுகம்தான்
நீ எழுத முயலும்போது
*நீ கை விரல் சூப்புவது
சுகம்தான் பசிக்கு
பால் புகட்டும் முன்
*நீ தூங்குவது
சுகம் தான் என்
மடியில் சாய்ந்து
*நீ சேயாகி என்னை
தாயாக்கி சுகம்
தந்தாய்
*உன்னை கண்ணின்
இமை போல் காத்திருப்பேன்
கண்ணுறங்கு
கோவை உதயன்