என்னடா உலகம் இது?
சிறு வயது...
இரண்டு மீட்டாய்....
யாருக்கும் தரமாட்டேன் என்றேன்...
"கெட்டிக்காரன்" என்றார்கள்...
பள்ளி பருவம்....
அடுத்தவன் சைக்கிளில் அனுமதி இன்றி வந்தேன்....
"புத்திசாலி" என்றார்கள்...
கல்லூரி பருவம்...
காதல்கள் பல செய்தேன்..
"காதல் மன்னன்" என்றார்கள்...
வாலிப பருவம்....
கொள்ளைகள் பல செய்தேன்..கொலைகள் சில செய்தேன்.... "தீவிரவாதி" என்றார்கள்...
அத்தனையும் விட்டு அரசியலில் சேர்ந்தேன்..
"தலைவா" என்றார்கள்...
அதையும் விட்டு ஆசிரமம் சென்றேன்...
போலி சாமியார் என போலீசார் கைது செய்தனர்... என்னடா உலகம் இது?