சாமி கிடா (1)

கார்த்திகை மாதத்தில் காய்ச்சலோடு
கடுமையாய் வந்தது மஞ்சள் காமாலை
சித்த மருத்துவம் செய்து பார்த்தும்
சிறிதும் குறையவில்லை நோயின் தாக்கம்
அலோபதி வைத்தியத்தில் அதிகம் செலவழித்து
அப்பாவின் கடன் போல் நோயும் வளர்ந்தது
அம்மா மட்டுமே குல தெய்வத்திற்கு
ஆட்டு கிடா பலி கொடுக்க வேண்டிக்கொண்டாள்
மஞ்சள் காமாலை எனக்கு குறைந்திட்டதாம்

சித்திரை மாதம் வந்தவுடன் சேதி
சித்திக்கும் சொந்ததிற்க்கும் சொல்லியனுப்பி
பூசாரி கிழவனுக்கு பாக்கு வைத்து
புது வேட்டி சட்டையும் எடுத்து வைத்து
மல்லிபூ மாலையில் அலங்கரித்து
மறு கையில் அரிவாளை ஆதரித்து
ஆட்டு கிடா அதை ஓட்டிவந்தார்

அவசரத்தில் அதை பலியிட்டார்
அறுசுவையென படைத்தும் விட்டார்
பாட்டில்கள் எடுத்து வந்தால் பாவம் வரும்
பதுக்கி வைத்திருந்தார் நாட்டு சாராயம்
போதை ஏற்றி சொந்தம் போயும் விட்டார்
புரியா நானும் கிடா கறி உண்டேன்
முடிந்து விட்டதாம் சாமியின் நேர்த்தி

மறுநாள் முழுதும் வயிற்று போக்கு
மரணம் ஆகிவிட்டார் ஒரு சொந்தம்
காரணம் ஆனது சாமி குத்தம்
காயை அடித்த கிடாவை வெட்டியதால்
எனக்கும் ஒன்றும் ஆகவில்லை
இன்னும் பலருக்கும் இப்படியே
ஆனாலும் சொந்தம் இதை நம்பவில்லை

என் ஆத்தா சாமியை நிந்தித்தால்
இனி ஆயுளுக்கும் கிடாவை வெட்ட மாட்டேன்
தப்பை திருத்தித்தான் தண்டிக்கவில்லை
தவிக்க வைத்ததாம் சாமி குத்தமாம்
மருத்துவ கல்வியை நான் படிக்கையில்
மறந்து போன இந்த பழம் நினைவு
எட்டி பார்க்குது சாராய குத்தமென்று
இருந்தாலும் சாமியை நம்பனுமோ தெரியலையே ?




எழுதியவர் : . ' . கவி (11-Dec-10, 5:04 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 422

மேலே