நகைச்சுவை 23

அப்பா; கண்ணா நாம கடற்கரைக்கு போய் விளையாடலாம் வாப்பா ..
பையன் ; அப்பா..கடல் ஏன்பா நீல நிறத்தல இருக்கு..
அப்பா; வானத்திலருந்து பெய்ண்ட ஊத்திட்டங்க ..
பையன் ...ஆனா..கடல் அலை மட்டும் வெள்ளை கலர்ல இருக்கேப்பா ..
அப்பா; அது மட்டும் நீலக் கலர் வேணாம்னு வெளியே வெளியே வந்துடுது ..

பையன் ;அப்பா கடலுக்குள்ள என்ன இருக்கு ?
அப்பா; மீன் இருக்கு
பையன் ; மீனா ஏன் கடலுக்குள்ள போட்டிங்க ...?
பையன் ; அப்பா.. ஏன் மீன் மட்டும் கடலுக்குள்ள சாகாம இருக்கு ?ஆனா என்ன மட்டும் கடலுக்குள்ள போகாதேன்னு சொல்றீங்க ?
அப்பா; ?????

பையன் ; அப்பா ஏன் கடல் தண்ணீ மட்டும் உப்பு கரிக்குது ?நம்ம வீட்டுத் தண்ணீ மட்டும் கரிக்கல?
அப்பா;அது மீன்களோட கண்ணீர் !!நம்ம வீட்டுத் தண்ணீர்ல மீன்கள் இல்லையே அதான் ....!!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (14-Jun-13, 11:33 am)
பார்வை : 320

சிறந்த நகைச்சுவைகள்

மேலே