சிரிக்க சிந்திக்க

தம்பி;ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
அண்ணன்; தெரியலியே
தம்பி ; ரேஷனில் எடை குறையும் ..பேஷனில் உடை குறையும்
*********************************************************************

அண்ணன்; சீப்புக்கும் வாழைப் பழத் தோலுக்கும் என்ன வித்தியாசம்
தம்பி;தெரியலப்பா
அண்ணன்; சீப்பு தலையை வாரும்.. வாழைப் பழத் தோல் காலை வாரும்
********************************************************************

மகன்; அப்பா! உங்களால இருட்டில் எழுத முடியுமா ?
அப்பா; ஏன் கேக்குற?எழுத முடியுமே ...?
அப்பா நீங்க லைட் ஆப் பண்ணிட்டு என் ப்ரோக்ரஸ் ரிபோர்ட்ல கையெழுத்து போடுங்க ..
அப்பா;????
*********************************************************************
ஆசிரியர் 1; ப்லம்மரை ஏன் ஹெட் மாஸ்டர் அவசரமா வரச் சொன்னார்
ஆசிரியர் 2;கொஸ்டீன் பேப்பர் எங்கேயோ லீக் ஆயிடுச்சாம் .

********************************************************************
அப்பா;ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா ..
பையன்;ஆண்டவா!எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு ...

எழுதியவர் : படித்தவை கேட்டவை (13-Jun-13, 10:28 pm)
பார்வை : 359

மேலே