கம்பனுக்குக் கொம்பன்

பொண்ணு எங்கே இருக்காங்க?
லிஸ்பன்
அது எப்பேர்ப்பட்ட இடம்?
அர்பன்
பையனோட பேரு என்ன?
ஸ்டீபன்
பையன் தென்ஆப்ரிக்காவில் எங்கே வேலை பண்ணுறார்?
டர்பன்
பையனுக்கு பிடித்த டிபன்?
பேக்கரி பன்
பொண்ணுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?
கார்பன்
பொண்ணுக்கு பிடிச்ச பிஸ்கேட்டு?
போர்பன்
பையன் ஆஸ்திரேலியாவில் எங்கே வேலை பார்க்கிறார்?
மெல்பர்ன்
பொண்ணு கம்பெனில என்ன தயாரிக்கிறாங்க?
ரிப்பன்
கல்யாணத்தன்று காலைல என்ன டிபன்?
டீ -பன்
பையனோட அப்பா பேரு?
சுப்பன்
பொண்ணோட அப்பா பேரு?
குப்பன்
மாப்பிள்ளைத் தோழன் யாரு?
நண்பன்
நண்பன் பேரு?
ரூபன்
பொண்ணோட குணம் எப்படி?
ஓபன்
பையன் சுபாவம் எப்படி?
அன்பன்
கோபம் வந்தா என்ன பண்ணுவன்?
அடிப்பன்
ஆமாம், பொண்ணு பேரு?
புனிதா க்ரீம்பன்
ரொம்ப நக்கலா பேசுறீங்களே, உங்க பேர் என்ன?
குறும்பன்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Nov-24, 7:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

மேலே