வரவை தேடும் உறவுகள்

மனித பிறப்பித்து
மகத்தான பிறப்பித்து
அன்பால் வசப்படுத்தி
ஆளவேண்டிய உலகம் இது ..............

மனித உறவை தேடமறுத்து
பணவரவை தேடும் உலகம்
மனித உணர்வுக்கு இடமில்லை
நல மனிதர்க்கு மதிப்பில்லை ..............

வசதி மட்டுமா வாழ்க்கை என்பது
வாழ்ந்து மடியும் பொய்யான உலகில்
அசதிக்கு ஆறுதல் தரும்
அன்பு சொந்தங்கள் தேவை இல்லையா ...........

பணக்காரன் பெருமனிதன்
கடன்காரன் தெருமனிதன்
உறவுகள் இருந்தபோதிலும்
பணமற்றவன் அநாதையே ...........

பார்த்தும் பார்க்காமல் செல்வான்
பகைவன்போல் ஒதுங்கி செல்வான்
நேற்றுவரை நெருங்கி இருந்தவன்
இன்று தூரம் போனான் பணத்தால் ..........

பாம்பை கண்டு படை நடுங்கும்
இது பழைய பழமொழி
பணத்தை கண்டு உலகம் நடுங்குது
இதுதான் புதுமொழி ...........

வரவை தேடியே உறவும் நெருங்கும்
வரவிருந்தால் உறவு தொடரும்
வரவில் கொஞ்சம் விரிசல் விழுந்தால்
உறவில் கூடவே விரிசல் வரும் ............

மனம் பார்க்காத உறவு அது
குணம் பார்க்காத உறவு அது
நிறம் பார்க்காத உறவும்
பணம் தேடி உன்னுடன் உறவு கொள்ளும் .........

தெருவில் கிடந்தபோது
உறவு பொய்யானது
வரவு சேர்ந்தபோது
உறவு மெய்யானது ...............

அன்பு பாசம் நேசம் எல்லாம்
அடகுவைத்துவிட்டார் பணமிடத்தில்
உறவை தேடும் சொந்தம் உலகில் இல்லை
வரவை தேடும் சொந்தகளுக்கிடையில்.............

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Jun-13, 4:00 pm)
பார்வை : 462

சிறந்த கவிதைகள்

மேலே