சுரப்பதென்ன சொல்லடி கள்ளிப பாலோ...?!!!
கொரில்லா தாக்குதலில்
கொலைபுரிய வந்து விட்டாய்....
மாவோயிஸ்டுப் பெண்ணே
மனம் எப்படி வந்ததடி.....!!!
புதுமைப் பெண்கள் நம்மை
ரவுத்திரம் பழகு என்றான்
ரவுடியாக மாறு என்று அந்த
ரவுத்திரத்திற்கு பெயர் இல்லை...!
பாரதத் திருநாட்டிலும் இந்தப்
பாரில் பட்டி தொட்டியிலும்
பாவைகளே காக்கும் சக்தியடி - அந்தப்
பண்பை நீ மறந்ததேனடி...?!
தாய்மையை கயமையாய்
மடந்தையே ஆக்காதே....!!!
தூய்மையை வாழ்க்கையாய்
தொழுது நீ வாழடி....!!!!