தாய்மையின் ஏக்கம்...
ஓடிக்கழித்து வந்த
நேரங்களிலெல்லாம்
இருந்து பருக
இடமில்லாத மடியிலும்
வளர்ந்துவிட்ட குழந்தையொன்று
அமிர்தம்
பருகிக்கொண்டிருக்கிறது…
முடிச்சுப் போட்ட
கர்ப்பக் குழாய் தாண்டி
இனி ஒரு குழந்தை
தங்கிவிடப் போவதில்லை என்பதை
உணர்ந்தவளின்
உயிர் தரும் ஏக்கங்கள்
அமிர்தப் பாலாகி
குழந்தையின் கடைவாய் வழியும்
கசிந்து போகிறது…
முற்றத்தில் தானியம் உலர்த்த
காக்கை விரட்டித் திரியும் கூட்டம்
கையில் தடியெடுத்து
விரட்டுவதென்னவோ
குழந்தையை
ஓடித் திரிவதென்னவோ
ஒரு தாய்மை..…!