அடேய்...அரிச்சந்திரா! நீயும் பொய் பேசு..

அடேய்...அரிச்சந்திரா!
அதுதான் உன் மனசாட்சி
அதை நீ மறந்துவிடாதே!
எது நல்லதோ
அது நடக்க
ஆயிரம் பொய் சொல்
எது கெட்டதோ
அதை முடக்க
ஆயிரம் பொய் சொல்
மெய் என்பது
பூவுக்குள் மறைந்திருக்கும்
வாசம் போன்றது
முகர்ந்தால்தான் தெரியும்
பொய் என்பது
சாக்கடையில் கலந்திருக்கும்
நாற்றம் போன்றது...
அருகில் போனாலே
அதுவாகவே நாறும்
அடேய்...அரிச்சந்திரா!
நீ பொய் சொல்லக்கூடாது
என்று நினைத்தால்...
உண்மை
உயிரோடு புதைந்துவிடும்
அரசியல்வாதிகள் பேசுவது
பொய்யா..? மெய்யா...?
எதுவும் புரியாது.
அவர்களிலும்
மலரும் உண்டு
மலமும் உண்டு
அடேய்...அரிச்சந்திரா!
எது நல்லதோ
அது நடக்க
நீயும் பொய் பேசு..
தேர்தலின் போது
உன் வாக்குச் சீட்டிலே
மதவாதிகள் செய்வது
பொய்யா..? மெய்யா...?
எதுவும் தெரியாது
அவர்களிலும்
மலரும் உண்டு
மலமும் உண்டு
அடேய்...அரிச்சந்திரா!
எது நல்லதோ
அது நடக்க
நீயும் பொய் பேசு..
ஆனால்...
கடவுளை வணங்கும் போது
உன் இதயத்தில் பூக்கட்டும்
மனிதாபிமானம்
(ஏதே தோணிச்சு
இப்படி எழுதிப்புட்டேன்...
எனக்கும் புரியல
எதுக்குனும் தெரியல..
எதுக்கும் நீங்க உஷார்
இதப்போட்டு குழப்பிக்காதீங்க...)