மின்மினி பூச்சியை பிடித்து ..
கிழிந்த காற்சட்டையுடன் ...
திரிந்த அந்த நாட்களை ,,
மீட்டுப்பார்க்கிறேன்...!!!
மின்மினி பூச்சியை பிடித்து ..
தீப்பெட்டிக்குள் போட்டு...
அது மூச்சு போக ஒரு ...
ஓட்டை போட்டு வைத்தேன் ...
எனக்கருகே வைத்தும் தூங்கினேன்...
எழுந்து பார்த்தேன் போட்ட ஓட்டையால் ..
ஓடிப்போனது மின்மினிபூச்சி ...
அழுதேன் தேடினேன் துடித்தேன் ...
மக்கு மண்டைக்கு விளங்கவில்லை...
மின்மினி கற்று தந்தது உனக்கு...
நீயோ சுதந்திரமில்லாத நாட்டில் ...
வாழுகிறாய் நான் ஏன்..???
அப்படி வாழவேண்டும் ...!!!