ஆறுதல் குரல் எழும்பியது

அறுவது அடிகள் ஆழம்போல்
இருக்குது என் வாழ்வின் சாபம்...
விழுந்தும் எழவில்லை
எனக்கு எழத்தெரியவில்லை ......

பாவப்பட்ட பாரங்கள்
கைக்கோர்த்துக் கொண்டு
நடனம் ஆடுகிறது
என் எண்ணம் சிதறுகிறது .....

விரிவான அறிவுரைகள்
கேட்டு கேட்டு சகித்துப் போனது
புரியாத இம்சைகள்
இன்று போய் நாளை வருகிறேன் என
பீத்திச் சென்றது ......

நல்லதென செய்தும்
தீமையாய் விளைகிறது
எண்ணிப்பார்த்து மொழிந்தும்
பூகம்பமாய் வெடிக்கிறது .....

விசைத் தட்டு ஒளி வரும்
என் வாழ்வின் துயர்க் கேட்டால் வலிதரும்
சாவும் தூரம் போனால்
இடர்மேல் இடர் வரும்
தேவைப்பட்டால் வெறுப்பும் வரும் ....

வாழ்கை பணமென
பணம் தேடினேன்...
மிஞ்சிய நாட்கள்
அன்பை தேடினேன் ....
தேடாத வரங்களை
தேடி தேடி தேய்ந்து போனேன் ...
புரியாத புதிருக்கு
முன் நின்று மழுப்பினேன்
தற்கொலை ஒன்றுதான் குறை ..
என் வாழ்கை தேய்பிறை ...

அனுபவம் வாழ்க்கையா என
தனியே வினவிய போது
அனுபவம் அது நான்தான் என
சிரித்தான் ஆண்டவன் ....
நல்லதோர் நிம்மதியை தேடி ...
அலைந்தோடினேன் ஆனால்
தேடலே நிம்மதியான
கதை நான் மட்டும் அறிவேன் ...

என்ன வாழ்கை இது .....
என் பிரச்சனைதான் என்ன .....
நான் என்ன செய்ய வேண்டும் .......
வாழ்கை சிகரத்தில் நிற்க
நினைப்பவன் நானில்லை ....
அதை தொட்டால் போதுமென
இருக்கும் மானிடன் ...
இது நடக்குமா என வேண்டினேன்

சிறிது நேரம் கழித்து
உணர்ந்துருகி கவிப்பாடியதே போதும்
உன் வாழ்கை இனி உன்னை உணரும் என்று
ஆறுதல் குரல் எழும்பியது ...
என் மனதில் .......

எழுதியவர் : பிரதிப் (17-Jun-13, 9:49 pm)
சேர்த்தது : Prathip Parthypen
பார்வை : 103

மேலே