காதல்...

ஒரு கனத்தில்
உன்னை தாக்கும் நோய்தான்
அவள் பார்வை உன்
நெஞ்சத்தை தாக்குமொரு ஆயுதம்தான்
அவள் விழிபார்த்த பின்னாலே
உன் மனம் கொஞ்சம் தள்ளாடும்
அந்த காதலின் பரிமாற்றம்
உன்னுள் வந்து குடிபுகும்
உன் விழிக்கூட உன்பேச்சை கேட்கமால்
அவள் பிம்பம் மட்டும் பார்க்கவே அலைந்தோடும்
வேறு வழி இங்கு உனக்குத்தான் இல்லாமல்
அவள் பாதம் பட்ட பாதையை மனம் தொடரும்
அவள் பேசிடும் வார்த்தைகள் நீ கேட்க
உன் வார்த்தைகள் முழுவதும் தொலைந்துவிடும்
வாசனை இல்லா பூ ஒன்று புது வலியுடன்
உன் நெஞ்சில் பூத்துவிடும்..

எழுதியவர் : பிரபுராஜ்.மு (18-Jun-13, 6:09 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 110

மேலே