எப்படி இருக்கிறாய் என் பள்ளித் தோழியே....
எப்படி இருக்கிறாய்....?
என் ஆரம்பப் பள்ளித் தோழியே...
உன்னுள் பெண்மை ஊற்றும் முன்னும்
என்னுள் ஆண்மை ஊற்றும் முன்னும்.....
நம்முள் நட்பு ஊற்றிப் போனது காலம்.....
என் எழுதாத சிலேட்டுக்காய்.....
நீ எச்சில் படுத்தி தந்த குச்சிகள்...
மனதோடு மழை தூறும் ....
என் மறுமை நாளிலும்....
முச்சந்து புளிமரமும்.....
பூச்சாண்டிகளும்.....
நமை பயமுறுத்தும் என
கைகள் கோர்த்தே நடப்போம்....வீதிகளில்...
ஆற்றங்கரையில் விளையாடி....
களைப்பு போக ஊற்றெடுத்து .....
தண்ணீர் குடித்த காலங்கள்....
மறக்காது தோழியே ....
மறுமை நாளிலும்....
இப்போதும் இருக்கிறாய்
சிறுபிள்ளையாகவே என் நினைவுகளில்....
இளமையில் பிரிவும்
இன்பம் தான் ஒரு வகையில்....
உன் பிம்பம் என்றும் இருக்குமே....
சிறுபிள்ளையாகவே....

