ஊர்க்கல்
இன்று வருவாய்
நாளை வருவாய் என்று
காத்திருந்தேன் விழிமூடாமல்..!
காக்கைக் குருவியெல்லாம்
ஏளனம் செய்யும் காலம்
இருந்தும் மாறாது வாழும்
நம் நேசம் இப்பூ வுலகம் உள்ளவரை ...!
என்றாவது ஒரு நாள்
உனக்கு நானாக
எனக்கு நீயாக
பிடித்தும் பிடிக்காமலும்
போகலாம் அக்கணமே
அன்று நாம் எழுதிடுவோம் கல்வெட்டுகளில்
உறைந்திருப்போம் ஊரின் உரைக்கல்லாய் ...!