@@@எங்கே போகிறது எதிர்காலம் ?@@@

ஆடை இல்லாமல் வாழ்ந்த
====ஆதிமனித காலமுதல்
அறிவியல் கல்வியில் வாழும்
====விஞ்ஞான காலம்வரை
மனிதன் அலைவது
====உணவைத் தேடியே !

நவீன எந்திரங்களை
====கண்டுபிடித்த மனிதனும்
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட
====நவீன எந்திரங்களும்
விதைக்காமல் உணவை
====இன்றும் கண்டறியவில்லை!

அறச்சோறு என்று தொடங்கி
====அன்னதானமாய் திகழ்கிறது
வறுமையில் வாழ்ந்தாலும்
====விருந்தோம்பலை விடவில்லை
பழந்தமிழர் வாழ்ந்த சீரான
====சிறப்பான வாழ்வை

நாகரீக மோகத்தில் மயங்கி
====நல்லவற்றை நசுக்கி எரிந்து
நாடகமயமாக நடிப்போடு
====நடமாடும் மக்களை
நாளும் பார்க்கையில்
====நரகமென்றே தோன்றுகிறது

பணம் படைத்தவன் ருசிக்காக அரைபிடி
====வாங்குவான் ஆயிரம் கொடுத்து
பாவம் ஏழை எங்கே போவான்
====அடிவயிற்றில் கிள்ளும் பசிக்கு
இன்று அழிக்கப்படும் விவசாயம்
====நாளைய மக்களின் அழிவிற்கே


செல்வந்தரானாலும் மனிதம் கொண்டு
====ஊருக்கே உலை வைத்தனர் - அன்று
செழிப்பவரானாலும் மனிதம்கெட்டு
====ஊருக்கே உலை வைக்கின்றனர் - இன்று
எங்கே போகிறோம் நாம்
====எதை நோக்கி போகிறோம் ?

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (24-Jun-13, 11:29 am)
பார்வை : 8556

மேலே