சுய மதிப்பு Vs தலைக் கணம்
என்னால் முடியும்
என்றே நினைத்தால்
ஏற உனக்கு வானம்
ஏணி அமைத்திடும்...!!!
தாழ்வுணர்ச்சி அது
கோணி ஒடுங்கிடும்
நானிலங்களும் உனை
வாழ்த்தி வணங்கிடும்...!!!
நினைப்பு மட்டும் உன்
நெஞ்சில் போதாது
செயலில் இறங்கடா
செயத்தை காணடா....
ஹே மானிடா உனை
மதித்து வாழடா
சுய மதிப்பு அது
சூப்பர் குணமடா....!!!!