எல்லோரும் சாஞ்சிடுவோம்
வெள்ளாறு வெடிச்சிருக்கு
வெதநெல்லு காத்திருக்கு
வெள்ளாம செய்யாம
வெகுமக்கள் பசிகிடக்கு...
வாய்கால் வற்றிடுச்சி
வானமும் தூங்கிடுச்சி
வயிறினை ஏமாற்ற
வஞ்சனைகள் தொடங்கிடுச்சி....
எலிகளும் செத்துடுச்சி
எல்லாமும் செய்தாச்சி
எய்துகின்ற துன்பமெல்லாம்
ஏழைக்கே நடந்திருச்சி....
வெண்சிட்டா பொறந்தாகூட
வெளஞ்சயிடம் போயிடலாம்
வெறுமிடத்தில் பொறந்ததால
வெளியசொல்ல முடியலயே....
செட்டியாரு அழைச்சாரு
செஞ்சிதர சொன்னாரு
செறுகாசும் கொடுக்காம
சென்றுவர பணிச்சாரு....
புல்லும் புளுகிடுச்சு
புண்ணாக்கு தீர்ந்திடுச்சு
வைக்கோலும் ஆனதால
மாடுகளும் சோந்திடுச்சி...
சனிக்கெழம சந்தைக்கு
மாட்டவிக்க சென்றோம்
சாணிமுட்டும் சேர்த்துவித்து
நாலுநாளே திண்ணோம்....
அண்டாகுண்டா அடவுவச்சோம்
ஆனமுட்டும் செய்துபுட்டோம்
ஆண்டவனே அழுததால
ஆவியாக துணிஞ்சிபுட்டோம்...
அடுத்தவீட்டு அழகும்
அப்படித்தான் செத்தான்
எழவுஅழ தெம்புயின்றி
அவன்பொஞ்சாதியும் செத்தா...
அதையேநாங்கள் செய்யமாட்டோம்
அனுவனுவா சாவமாட்டோம்
அரளிவெத அரைச்சிதிண்னு
அல்லாறும் சாஞ்சிடுவோம்.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,