எட்டாததிசயம்
மகரந்த சேர்க்கை
உண்டாகும் வேளை
காற்றுகளின் பிரளயம்
கவிபாடி ஆனந்திக்கும்
காற்றுகளின் சேர்க்கை
கவிகூறா ஆனந்தம்
குவிந்திடும் அங்கே
ஓசையாய் தித்திக்கும்
திக்கெட்டும் திரும்பினாலும்
மனதில் மட்டும் ஒரு ஸ்பரிச உணர்வு
ஏதோ இழந்து விட்டேனோ...?
இருப்பிடம் மறந்திட்டேனா...?
இல்லை உன் உணர்வுகள் உனக்குள்ளே
முகவரியுடன் உறங்கிக்கொண்டிருக்கிறது..
நீ சேர்க்கப்படுவாய்....பிறரால் அல்ல....!
உன்னால்...தட்டிக்கொடுத்து ஆதரித்தாள் தமிழ்த்தாய்..!
மெல்ல என் கால்கள் நடந்து
மேடுகள் பல கடந்து
பல காத தூரத்தில் ஏதோ ஒன்றினை
தேடிக்கொண்டிருக்கிறது என் கண்கள்...!
என்னது எனசொல்லிடும் உன் வாக்கை அறிவேன்..
உலகினில் உண்டாம் ஏழு அதிசயங்கள்
ஆண்டுகள் பலனூறாகியும்
எட்டாவதை இன்னும் கண்டிலது...!
காண்பதெல்லாம் எட்டாவதுதானோ...!
ஒன்றையொன்று முந்துகிறது...
எட்டையொன்றும் எட்டவில்லை
எட்டாதது எதுவோ அதுவே எட்டாவது...!
பரஞ்சோதி நெஞ்சினில் எட்டினான்
பழசாகிப்போனான்...நெஞ்சத்தைத்
தொட்ட தாயன்பு பஞ்சாகத்தான் பறந்தது...!
விண்னையொட்டின கட்டிடங்கள்
அஞ்சுகண்டத்திலும் கண்டேன்
எட்டினததுவும் பழசாய்த்தான் போனது
எட்டாதது எதுவோ அதுவே எட்டாவது...!
கடுகு மணியோ காராமணியோ
பணமோ பந்தமோ பாசமோ
எட்டிவிட்டால் எட்டியின் கசப்பு
காணாததைக் கண்டதா..?
கண்டது காணாததா...?
வந்தது போனதா..?
போனது வந்ததா...?
கேட்டது கிடைத்ததா...?
கிடைத்ததை இழந்ததா?
வந்ததா..? போனதா..?
பறப்பதா..? பாய்வதா..?
இருப்பதா..? இல்லாமல் இருப்பதா?
பசியா..? திறட்சியா...?
ஜீவனா..? மரணமா..?
பாசாங்கா...? பணிவா...?
இறைவா சொல்லிடு
எதுவது எட்டாவது..?
அந்த எட்டாவதைத் தேடுகிறேன்...
ஆண்டுகள் பலவாகியும் கண்டிலேன்
எண்ணத்தில் உண்டு- சொல்லும்
வண்ணத்தில் இல்லை..
முயற்சி தோற்றிட்டேன்...
இழந்திட்டேன் என்னையே...!
களைந்திட்டேன் நான்
எனும்அகம்பாவத்தை
ஒன்றுமில்லையென்றேன்...
நேற்றும் இன்றும் ஒன்றும் இல்லை
நாளையும் ஒன்றும் இல்லை
வீணாகவே மனுஷன் சஞ்சரிக்கிறான்
விருதாவாகவே ஆஸ்தி சேர்க்கிறான்...
நான் ஒன்றும் இல்லை- இது எட்டாதது
எட்டாததிதுதான் எட்டாவததிசயம்
எனக்கெட்டினதையும் எட்டாதாக்கினர்
மனம் பேதலித்தவனென
ஊண், உடை, உறக்கம், உறவு பாசம்
இழந்து வீதிக்கு வந்தேன்
கண்டேன் எட்டாததை எட்டாவதாய்
யாருக்குரைப்பேன் ஜீவனின்றி...
தோமஸ் சக்கரியா