உணவும் சுவையும் உடலும்
அறுசுவைகள். அவை புளிப்பு, கசப்பு - துவர்ப்பு, காரம், உப்பு, இனிப்பு ஆகியவை. இதில் கசப்பும் துவர்ப்பும் ஒரே நிலையில் செயல்படுபவை. மற்றும் முறையே ஐம்பூதங்களின் ( ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் அல்லது நிலம். ) சம்பந்தம் கொண்டவை.
சுவைகள், காந்தத் தன்மாற்றம் அடையக்கூடியவை. அவை நாவில் பட்டவுடன் உடலில் காந்தமாக உறுமாற்றப்பட்டு பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவைகள் சிலபல உடலுறுப்புகளுடனும் நேரடித் தொடர்பு கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில சுவைகளை மனம் விரும்பாது. அந்த நேரம் அந்த சுவையினால் ஏற்படும் ஷக்தி உடலில் நிரம்பியிருப்பதே அதற்குக் காரணம். அந்த உறுப்புகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டு அந்த உறுப்புகள் சோர்வாகக் கருதப்படும்வேளை அந்த சுவையுள்ள உணவினை உட்கொள்ளும்பொழுது அந்த உறுப்புகள் உற்சாகம் பெறுகின்றன. அதற்காகவே நம் முன்னோர்கள் ஒவ்வொருநாளும் ஒரு வேளையாயினும் அறுசுவை உணவு உண்ண வழிவகை செய்திருக்கின்றனர்.
புளிப்பு :
இது உடலின் ஐம்புலங்களில் ஆகாயம் ( வெற்றிடம் ) - பிராணசக்தியாக செயல்படுகிறது.. ஆன்மபலம் கொண்டது. இந்த சக்தி குறையும்பொழுது நரம்புகளின் குறைபாடுகள் ஏற்படும்.
உடலுறுப்பில் கல்லீரல், கண்கள், பித்தப்பை, இவற்றில் நேரடியாக தொடர்புள்ளவை. கோப உணர்ச்சிக்குக் காரணமானது.
களுத்துக்கு மேலுள்ள கண்களும் கீழுள்ள கல்லீரலும் ஒரே உருவ அமைப்புக் கொண்டவை.
( பொதுவாக களுத்துப்பகுதி இறந்த ஆவியுலகையும், மேலுள்ள தலைப்பகுதி இறைத்தன்மையின் வழிகாட்டலையும், கீழ்ப்பகுதி நிகழ்கால நடவடிக்கைகளையும், உடல் மற்றும் மனம் கொண்டிருக்கும் நிலைகளையும் குறிக்கும். )
காரம் :
ஐம்புலங்களில் காற்று ( வெற்றிடத்தினைவிடவும் கணமானது ) - பிராணசக்தியாகக் கொண்டது. துக்க உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் காரம் அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல் போயேபோய்விடும்.
உடலுறுப்பில் நுரையீரல், மூக்கு, பெருங்குடல் இவைகளில் தொடர்புள்ளவை. நுரையீரலும் மூக்கும் ஒரே தோற்ற அமைப்புகொண்டவை.
கசப்பு & துவர்ப்பு :
ஐம்புலங்களில் நெருப்பு ( காற்றின் தன்மையை ஒத்தது ) - பிராணசக்தியாக கொண்டது. மனதில் சந்தோஷ உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது. ரத்தக்கொதிப்பை அடக்கவல்லது. ஒரு பாம்புக் கடித்தால் கசப்பான வேப்பிலைகளை வாயில் கசப்புத்தன்மை வரும்வரை மென்றால் பாம்பின் விஷத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குப்பின் காப்பாற்றிவிடலாம். கசப்பு மற்றும் துவர்ப்பான உணவை விரும்பி உண்பவர்களுக்கு பெரும்பாலும் இருதயம் தொடர்பான வியாதிகள் வருவதில்லை.
உடலுறுப்பில் இதயம், சிறுகுடல், நாக்கு இவற்றில் நேரடித் தொடர்புள்ளவை.
இதயமும் நாக்கும் ஒரே தொற்றம் கொண்டவை.
உப்பு :
ஐம்புலங்களில் நீர் ( காற்றையும் நெருப்பையும்விட கணமானது. ) - பிராணசக்தியாகக் கொண்டது. மனதில் பயவுணர்வுகளை ஏற்படுதுவது. திருட்டு, பொய், ஏமாற்று, அநியாயங்களில் ஈடுபடுவோர் உப்பை மொத்தமாகத் தவிர்பது நலம்.
உடலுறுப்பில் சிறுனீரகம், மூத்திரப்பை, காது இவைகளில் நேரடியாக தொடர்புள்ளவை. சிறுநீரகமும் காதுகளும் ஒரே தோற்றமுள்ளவை.
இனிப்பு :
ஐம்புலங்களில் மண் அல்லது நிலம் ( எல்லாவற்றையும்விட கணம் மிகுந்தது.) - பிராணசக்தியாக கொண்டது. மனதில் கவலைகளை ஏற்படுத்தவல்லது. எந்தவேலையாயினும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்துமுடிப்பின் கவலையில்லை. இனிப்பை விரும்பி உண்பவர்களுக்கு வயிற்றுப்பிரச்சனைகள் வருவதில்லை.
உடலுறுப்பில் இரைப்பை, மண்ணீரல், உதடுகள் இவற்றில் தொடர்புகொண்டவை. மண்ணீரலும் உதடுகளும் ஒரே தோற்றமுடையவை.
நோய்கள் உண்டாகக் காரணங்கள்:
நம்முடல் தினம்தினம் கோடிக்கணக்கான செல்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் கோடிக்கணக்கான செல்கள் அழிகின்றன. அந்த அழிந்த செல்களை அப்புறப்படுத்தி, புதிய செல்களை உருவாக்க வேண்டிய சத்துக்களை உணவின் மூலம்பெற்று செல்களுக்கு கொண்டுசெல்லும் முக்கியமான வேலையை ரத்தம் செய்கிறது. ஆக நம் உடலுக்கு ரத்தமே பிரதானம். ரத்தம் கெட்டாலோ, அவைகளைக் கொண்டுசெல்லும் வேலையை அது சரிவர செய்யமுடியாவிட்டாலோ, தடை ஏற்பட்டாலோ ஒரு துயரம் உண்டாகிறது. ஒரு மின்காந்த இழப்பு உண்டாகிறது. அதுவே நோயாக கருதப்படுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நோய்க்கான அடிப்படைக் காரணங்கள்:
1. ரத்தத்தின் பொருட்களின் தரம் குறைதல்..... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
2. ரத்தம் அளவில் குறைதல்...... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
3. ரத்தத்தின் பொருட்களின் அளவு குறைதல்....... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
4. செல்களின் உற்பத்தி செய்யும் திறன் குறைதல்....... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
5. மனதில் ஏற்படும் பாதிப்புகள்...... நடைமுறையில் வேலைகளை சரியான திட்டமிடலில் செயல்படுத்துவது. உள்மனம் சொல்வதைக் கேட்டு அதன்படி லயத்துடன் நடப்பது. சுவைகளினால் மாற்றமடைவது.
6. புத்தி கெட்டு போய்விடுதல்..... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
7. ஆழ்மனப் பதிவுகளின் தாக்கங்கள்...... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
8. ஆன்ம சக்தி குறைதல்......... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
9. நம்மைச் சுற்றி அமைந்திருக்கும் ஆராவின் வீரியம் குறைதல்........ தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
10.பஞ்சபூதங்களின் தன்மைகள் குறைதல்....... சுவைகளினால் மாற்றமடைவது.
11. பிறப்பிலேயே கொண்டுள்ள குறைபாடுகள்....... தியானம், இறைவனைத் தொழுதல்.
12.பரம்பறை விஷயங்களால் ஏற்படும் குறைகள்....... தியானம், இறைவனைத் தொழுதல்.
இவைகளால் மட்டுமே நோய் ஏற்படமுடியும். இவைதவிர்த்து வேறெந்த காரணங்களும் இருந்திட முடியாது. இவைகளில் சிலவற்றை ஆன்மீகமும் தியானமுமே வழிநடத்தி சரிசெய்திட முடியும். ஆனால் பலவற்றை உணவின் மூலமும் அதன் முறைகள் மூலமும் சரி செய்திட முடியும்.
உணவுகள் :
பச்சையான இயற்கை உணவுவகைகள், பழங்கள், சமைக்காத தேங்காய்ப்பொருட்கள், வெள்ளரி, கேரட் போன்ற பச்சையாக உண்ண சுவையாக இருக்கும் பொருட்கள் முதலிடம் பெருகின்றன.
பச்சையாக சாப்பிடமுடியாத முளைகட்டிய பயறுவகைகள், தானியங்கள், சுவையற்ற பழங்கள், காய்கள் இவற்றால் கொண்ட உணவுகள், 2மிடம் பெரும் உணவுவகைகள்.
சமைத்த சைவ உணவுவகைகள், கீரை, சாதம், சப்பாத்தி முதலானவைகள் மற்றும் மீன் உணவுவகைகள், 3ஆமிடம்.
மற்றெல்லா அசைவவகை உணவுகள் 4மிடம்.
டீ, காப்பி, பாட்டில் பான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், பீடா, பாக்கு, புகையிலை போன்றவைகள், மதுவகைகள் 5மிடம். பொதுவாக இவைகள் தவிர்க்கப்பட வேண்டியவைகள்.
உணவுமுறையில் கவனிக்கவேண்டியவை:
உணவு உண்ணுமிடம் சுத்தமாகவும், சத்தமின்றியும், கவனம் மாறாததாகவும், அவசரமின்றி அமர்ந்து கொள்ளத்தக்கதூவுமாக இருக்கவேண்டும்.
நன்றாக பசியெடுத்தபின் மட்டுமே உணவை உட்கொள்ளவேண்டும். நேரம் பற்றி கவலைகொள்ளக்கூடாது.
உணவு உட்கொள்ளும் முன்னோ, உணவின்பொழுது இடையிலோ நீர் அருந்துதல்கூடாது. அது வயிற்றின் செமிக்கும் திறனை பாதிக்கும்.
உணவு உட்கொள்ளும்வேளை எடுக்கும் கவளம் நம் பற்களால் நன்கு மெல்லப்பட்டு கூழாக்கி முழுவதும் உமிழ்நீரால் கலக்கப்பெற்று பின்னரே விழுங்கிட வேண்டும். அவசரமாக உண்ணுதல்கூடாது.
உட்கொள்ளும்பொழுது உணவின் சுவையை நன்கு அனுபவித்துச் சுவைத்து உண்ணவேண்டும். முழுக்கவனமும் உணவிலேயே இருந்திடல் வேண்டும்.
உணவு உட்கொண்டபின் தாகம் எடுத்தபின்னரே தண்ணீர் பருகிடல்வேண்டும். தவிக்காமல் எப்பொழுதுமே தண்ணீர் பருகுதல்வேண்டாம்.
மனமும் நாக்கும்தான் நமக்கு மருத்துவர். ஆதலால் நாக்கு சுவைத்திட விரும்பும் அனைத்தையும் முறைப்படி வேண்டுமட்டும் சாப்பிடலாம்.
தரையில் அமர்ந்து சம்மணமிட்டு உணவு உட்கொள்ளுதல் மிகவும் நலம்.
குளித்தபின்னர் அரைமணி கழித்து அதபிந்தான் உணவுகொள்ளுதல் வேண்டும். அதுபோல உணவுக்குப்பின் 2 மணிநேரம் கழித்துத்தான் குளித்திடல் வேண்டும்.
மூன்றுவேளை உணவில் ஒருவேளையாவது அறுசுவை உணவாக அது இருந்திடல் வேண்டும். முன்னர் கண்ட ஆறு சுவைகளும் கொண்ட உணவு வகைகள் அது.
உணவில் இனிப்பை முதலிலேயே சுவைத்திடல் வேண்டும்.
மண்பானை நீரே மிகவும் சிறந்தது. அதில்தான் அதிகமான பிராணவாயு கலந்திருக்கும். பாட்டில்ட் தண்ணீரை பெரும்பாலும் தவிர்த்திடல் வேண்டும். நீரை அருந்தும்பொழுது அதன் சுவையை நன்கு ரசித்துப் பருகவேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் அவசியம். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்ததும் நீர் அருந்துதல் அவசியம்.
சுத்தமான இயற்கைக் காற்றை சுவாசித்தல் மிகமிக அவசியம். ஏசியினை பெரும்பாலும் தவிர்க்கவேண்டும். கொசுவர்த்திச் சுருள் போன்றவைகள் கூடவேகூடாது. அவைகள் கொசுவைவிடவும் ஆபத்தானவைகள்.
ஒருநாளைக்கு 6 மணிநேர உறக்கம் அவசியமானது. கைகால்களை நீட்டி தளர்வாகப இடையூறின்றிப் படுத்து உறங்குதல் நலம். இரவு உணவுக்குப்பின் 2 மணிநேரம் அமைதியாக மொட்டைமாடியிலோ, காற்றோட்டமான ஒரு இடத்திலோ அமர்ந்திருந்தபின் உறங்கச் செல்லலாம்.
இந்த வகைகளில் நம் வாழ்க்கை முறை அமைந்தால் நோயற்ற வாழ்க்கையாக அது அமையப்பெறும்.