வானில் சீற்றம் லிமரைகூ

துரத்தியது மேகப் படைகள்
வீழ்த்தியது கருமை காடுகளை
வென்றது வெற்றிக் கோட்டைகள் ..!

சுட்டு வீழ்த்தியது எதிரிகளை
தட்டிப் பறித்தது குன்றங்கள்
ரகசியமாகக் காத்தது கிரிகளை ...!

ஓங்காரமாய் ஒளித் தூறல்கள்
ரீங்காரமிட்டும் சீறியது காற்று
மழைக்காரன் பூமிக்குக் கீறல்கள்..!

தாழ்வாகப் பறந்தும் தாக்குண்டது
விமானப் பறவை ஒதுங்கியும்
தரையில் விழுந்து மாண்டது ..!

எழுதியவர் : தயா (25-Jun-13, 6:33 pm)
பார்வை : 121

மேலே