வலிகளில் வலியது
வயதுக்கு வந்த நாட்களிலிருந்து
வந்துவிடும் அந்த நாட்களின்
வலியையும் வேதனையையும்
விவரிப்பது பெண்ணுக்கே சாத்தியம்
மாதம் தவறாமல் வரவேண்டுமெனும்
மாதர்களின் இலக்கு இந்த மாதவிலக்கு
உள்ளமோ தாழ்ந்து போகும்
உடலோ சோர்ந்து போகும்
வகுப்பறையில் இருப்பு கொள்ளாது
பாடத்தில் கவனம் செல்லாது
உள்ளாடை உணர்த்தும் இதன் கசிவை
உள்ளம் உணரும் அதன் வலியை
பரபரப்பாய் இயங்கும் ஆசிரியரிடம்
அருவருப்பாய் தயங்கி நின்றவள்
சார் தண்ணீர் என்றாள்-அவரோ
சாதாரணமாய் இது அவசிய பாடம் என்றார்
இடைவிடாது வரும் வயிற்று வலியையும்
இடையில் கைவைத்து பிடித்துக்கொண்டு
உள்ளம் வெட்கி காத்திருக்கலானாள்
உணவு இடைவேளையை நோக்கி.