வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் ...!!!
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும்.
காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண் டும்.
இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பா லான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட் லைட் டுகள். அதனால் பரிந்துரை க்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும் ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும் போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.
வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துக ளைத் தவிர்க்க முடியும்.
மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.
அசதியாக வோ , சோர்வாகவோ இரு ந்தால் வாகனத்தைச் சாலை யோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிற கே வண்டியை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது
நன்றி Muthumohamed