பெட்டியைத் தூக்கணுமா?

ர்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம் ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான் தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!"

"வேணாம்பா!"

"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"

"இப்போ வேணாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்"

"தனியா உங்களால தூக்க முடியாது சார். நம்மள விட அதிக எடையை சுலபமா தூக்குறதுக்கு நாம என்ன எறும்பா?"

"என்னப்பா சொல்ற"

"ஆமா சார். எறும்பு தன்னோட எடையை விட 50 மடங்கு அதிகமுள்ள எடையை தூக்கும். அதே போல தன்னை விட 300 மடங்கு எடை அதிகமுள்ள பொருளை இழுக்கும். இது ஆராய்ச்சில நிரூபிக்கப்பட்டிருக்கு!"

"அடேங்கப்பா...சூப்பர் தகவல் தெரிஞ்சி வச்சிருக்கியே...நம்மள விட ஒரு மடங்கு அதிக பாரத்தை சுமக்கவே கஷ்டப்படுறோமே..."

"அதான் சார் சொன்னேன். பெட்டியை நான் தூக்கறேன்னு...நாங்க ரொம்ப சுலபமா தூக்குவோம். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"

"காசுக்காக நான் யோசிக்கல"

"பின்னே"

"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

நன்றி முகநூல்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jun-13, 11:39 am)
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே