கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி...
கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everthing)
மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
கணவன் : தேவைதான்டி எனக்கு !
==========================================
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் மிருகமா மாறிடுவேன் ஜாக்கிரதை !
மனைவி: அட நீங்க வேற எலியைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!
==========================================
மனைவி : என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”
கணவன் : ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!
==========================================
“தரகரே… நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க.”
“என்ன சொல்றீங்க?”
“பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே…”
==========================================
“டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!”
“கனவு தானே வருது… அதனாலென்ன?”
“இல்ல டாக்டர். இடை இடையே இந்தக் கனவை உங்களுக்காக வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே!”
==========================================
“பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”
==========================================
“ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”
“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு”
==========================================
1. ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி நான் பேசாதிருக்கும் வரை..
2. வீட்டை சுத்தப் படுத்துவதற்காகவே பண்டிகைகளை கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
3. வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
# போதி தர்மனின் முந்தைய வாரிசு
நன்றி ;முழுமுதலோன்