முடிந்தால் சிரிச்சி வைங்க...
தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு.
அப்படியென்ன பண்ணுனீங்க..?
சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன்.
**********
பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள
அதை ஏன் வெளியிடலை?
அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.
**********
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!
**********
இயக்குனர்: என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
கதாசிரியர்: புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!
**********
தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?
ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!
**********
ஆசிரியர்: இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?
மாணவன்: எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.
**********
எனக்கு ஒரு மொட்டை கடுதாசி வந்திருக்கு
எங்கிருந்து?
பழனியிலிருந்து.
**********
"உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க?"
"பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி"
நன்றி ; ராம்