ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

வழி மேல் விழி வைத்து
முதியோர் இல்லத்தில்
முதியோர்கள் !

நேரம் கிடைத்தால்
ரசித்து மகிழுங்கள்
வானம் !

உதட்டில் புன்னகை
உள்ளத்தில் ரணம்
திருநங்கைகள் !

வாசிக்க சுகம்
ரசிக்கும் மனம்
கவிதை !

வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம்
வாக்குப்பிச்சை
மேல்சபை தேர்தல் !

மரங்களை வெட்டி
யாகம் நடந்தது
மழைக்காக !

வேண்டாம் வன்சொல்
வாடிடும் பிஞ்சு
அன்போடு கொஞ்சு !

வெள்ளத்தில் பக்தர்கள்
காக்கவில்லை
கடவுள் !

மின்தடையிலும்
ஒளிர்ந்தது
மின்மினி !

அன்று சேவைக்காக
இன்று தேவைக்காக
அரசியல் !

அன்று மக்களுக்காக
இன்று தன் மக்களுக்காக
அரசியல் !

கற்பித்தன ஒழுக்கம்
காந்தியடிகளின்
மூன்று குரங்குகள் !

திறந்திடுவார்கள்
உடையுமோ பயத்தில்
அணை !

பைத்திமாகியும்
காரியமாக
அரசியல்வாதி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Jun-13, 9:04 pm)
பார்வை : 161

மேலே