ஈழ நிலை............

தாய்க்குமுன்
பாலுக்கேங்கும் குழந்தையாய்
தாய்தமிழர்கள்முன்
ஈழத்தமிழர்கள்...........

விலங்குகளுக்கு
சட்டமியற்றியவர்கள்,
விடியலுக்கு ஏங்குபவர்களை
சம்மட்டியால் அடிக்கின்றனர்.............

பிஞ்சுகளின் மார்பில்
பீரங்கிக்
குண்டுகள்.................

பதுங்குகுழிகளில்
பிணங்களோடு
வாழ்க்கை...............

பாலற்ற மார்புகள்
பக்கத்தில்
குழந்தைகள்.................

படைத்தவனே
கலங்குகின்றான்,
படுகுழியில்
தமிழினம்....................

விருந்தோம்பல்
படைத்தவனே
விதிமாறி நிற்கின்றான்,
ஒருவேளை சோற்றுக்கு
ஒருபொழுதாய் வரிசையில்..................
=============================

எழுதியவர் : பாசகுமார் (28-Jun-13, 4:43 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 100

மேலே