மதுரை வாழ் தோழமை நெஞ்சங்களே...ஒரு நொடி...உங்களுடன்...
மதுரை வாழ் தோழமை நெஞ்சங்களே...,
வணக்கம்
உங்களுடன் ஒரு நொடி...
இற்றைநாள் பல இளைஞர்கள் பன்னெடும் வழிகளில் சல்லாப உல்லாச விநாடிகளை விழுங்கிவிட்டு கால விரயத்தில் வாழ்வது நாம் அறிந்தது .
இந்நிலையில் நம் தளத்தில் பாராட்டத்தக்க வகையில் பல வாலிப பறவைகள் படைப்பு பந்தலில் கிடப்பதும் நாம் அறிந்தது.
அவர்கள் தொழத்தக்கவர்கள். என்றாவது இந்த உலகில் விடியல் விரும்பிய வண்ணம் வராதா என்று செயலாக்க விதை விதைத்து இருக்கும் படைப்பால உழவர்கள் மத்தியில் தோழர்.மதுரை. தமிழ்தாசன் பல குமுகாய தொண்டுகளை சப்தம் இன்றி ஆற்றி வருகிறார்.
இவ்வகையில் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்க விரும்பி செய்தி ஒன்றை தளத்தில் பதிந்துள்ளார்.
பரிசு பெறுவது வளர்ச்சி: பங்கேற்பது மகிழ்ச்சி..... மகிழ்ச்சி அளிப்பவர் எவரும் மனிதர்களில் உயந்தவரே...
நீங்களும் உயந்தவர்தானே...தோழர் தமிழ்த்தாசனுக்கு உதவி செய்வோம்...
உடனடி உதவியாற்ற மதுரை வாழ் தோழமை நெஞ்சங்களை வேண்டுகிறேன்...