!!எண்ணத்தை இறகாக்கி !!!

ஏழுஜென்மமும் இதுபோல்
வாழ்ந்திட ஆசை ஆசையாய் .....

எஸ்கிமோக்கள் கூடாரத்தில்
எதார்த்தமாய் வாழ்ந்து
எவரெஸ்ட் சிகரமேறி
ஓ'வென சத்தமிட்டு ,

இமயமலை அடிவாரத்தில்
அமைதியாய் தியானித்து
குறிஞ்சி மலைத்தேனும்
தினையும் பருகி ,

அதிசயங்கள் ஏழையும்தாண்டி
ஆனந்த தாண்டவமிட்டு
அண்டார்டிகா பனியில்
அலைந்து திரிந்து ,

அலையாத்திக் காட்டினுள்ளே
ஆரவாரமாய் குளித்து
அஸ்ஸாம் வனத்தில்
அசந்து உறங்கி ,

மின்மினியாய் மின்னி
பட்டாம்பூச்சியாய்
பாரெங்கும் பவனிவர
ஆசை ஆசையாய் ........

எழுதியவர் : ப்ரியாராம் (29-Jun-13, 5:38 pm)
பார்வை : 88

மேலே