ஆயிரம் அழகில்

அடி வானில் வந்த என்னை
மின்னல் கண்கள் கொண்டு
கூறு போட்டது ஏனோ?
அந்த கீறல் விட்ட வடு
காயம் காயம் இல்லை - உனை
கண்டதும் காய்ந்திட மாய்ந்திடுமோ?
ஆஹா பாறையில் பிளவா?
அதனுள் வேர்விட்ட நீ யார்?
அடி போற போக்கில் வந்து
பூக்கள் வீசிவிட்டு
வாசம் வீச விழுந்தேன்,
அதை கொண்ட வண்டாய் மீண்டும்
வேண்டி வேண்டி உனை
தேடி தேடி திரிந்தேன்,
இருளை தின்றுவிட
இரவும் தீர்ந்துவிட
தூக்கம் தூக்கம் துறந்தேன்,
இனிய உருவம் ஒன்று
ஒளியின் உருவில் வந்து
உருக்கி உருக்கி கொன்றதேன்?
வானில் உள்ள கூரை, ஒன்றுதான் டி,
நீயும் வந்தால் போவேன் அதை தாண்டி!
அடடா ஆயிரம் அமுதா?
அமுதா? அதைவிட இனிதா?
இருளா? அதைவிட கொடிதா?
மருந்தா? மலர்கொண்ட மதுவா?
அந்த வானம் போதவில்லை
ஏன் நானும் போகவில்லை? அதை
தாண்டி தாண்டி பறந்தேன்!
அங்கு காணும் தூரம் வரை
காற்று ஏதும் இல்லை - அவள்
சுவாசம் ஏந்தி மிதந்தேன்!
வசிய பார்வையிலே
விசையும் தாண்டிவிட்டேன் - ஒரு
விடியல் வேண்டி கிடந்தேன்,
மனம் கனத்து கனத்து
உடல் இளைத்து இளைத்து -
இந்த நோயில் நேரம் இழந்தேன்,
நிறையா நீரா? நீயா?
தீரா தாகம் இதுதானா?