பூரிக்கும் புன்னகை

உன்னுயரம் வளர்ந்திட்டேன்
உன்னைவிட வளருவேன் என
உள்ளம் மகிழ்ந்திடும் மழலை
கள்ளமில்லா சிரிப்புடன் சொல்கிறதோ !
வளராவிட்டாலும் நான் என்றும்
வயதில் மூத்தவன் ஆனாலும்
வாழும்வரை மறவேன் உன்னை
நண்பனே என்று நவின்றிடும் நாய் !
ஏங்கிடும் பார்வை நன்றியுள்ள உயிர்க்கு
பூரிக்கும் புன்னகை பிஞ்சு உள்ளத்திற்கு !
பாசமும் நேசமும் பாரினில் நிலைத்தால்
வாசமிகு இன்பம் பொங்கிடும் என்றும் !
பழனி குமார்