26.12.2004(சுனாமி)
கைப்பிடியில் ரோஜாவைக் கொண்டு
கடலோரம் காத்திருந்தேன் !
நடை போட்டு என் முன்னே
சிலை போல நீ நின்றாய் !
ஹாய் என்று நீ சொல்ல
தயக்கத்தில் தலை நிமிர்ந்தேன் !
வரச்சொன்னாய் வந்துவிட்டேன்
என்னவென்று நீ கேட்டாய் !
வார்த்தைகள் வரவில்லை
உலரலில் சிக்கிவிட்டேன் !
தலையே வெடித்திடும்
சட்டென சொல்லேன்றாய் !
பெருமூச்சு உள்ளிழுத்து
என் காதலை சொன்னேன் !
சொன்னப்பின் மௌனத்தில்
அரைநிமிடம் எனை முறைத்தாய் !
என் காதலன் என்று சொன்னவுடன்
மெதுவாய் நான் சிலிர்த்தேன் !
மற்றொருவனை என்று நீ முடிக்க
அரைநொடியில் அடித்தது ஆழிப்பேரலை !