இரவு

அந்தி வான அடகுக் காரன்
மறைத்து விட்டான் சூரியனை
மந்தி உண்ணும் நாவல்பழ்
நிறமே சூழ்ந்தது பூமியினை

நீலவானில் கருமை படர்ந்தது
கோலப்புள்ளியாக விண்மீன் வந்தது
இருட்டு நிழலாய் இரவு தொடங்க
திருட்டுத் தனமாய் நிலா வந்தாள்


மேகமென்னும் பட்டுத் துகிலுடுத்தி
முகம் மட்டும் காட்டும் பேரழகி
முகிழ்த்து மனம் கமழும் மல்லிகை
நெகிழ்ந்த நெஞ்சம் பாடும் இங்கே

கடல் அலைகள் கரையேற துடிக்கும் இரவு
மடலவிழ் தாழை மணக்கின்ற இரவு
உலகே ஓய்வெடுத்து உறங்கும் இரவு
நிலமகளோ ஓய்வதில்லை உருளுகிறாள் நாளும்

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (1-Jul-13, 2:31 pm)
பார்வை : 67

மேலே