காடு மிரண்டால்.....

நாட்டை ஏமாற்றினாய்
சூது கவ்வவில்லை....
காட்டை ஏமாற்றினாய்
வெந்தும் தணியவில்லை...

காட்டுக்குள் சுரங்கம்
ஆற்றுக்குள் அரங்கம்
புனித ஸ்தலமும் மிதக்கின்றது......
ஓட்டுக்குள் பதுங்கும்
ஒட்டு மொத்த அரசியல்
பிணமாய் சிரிக்கின்றது.....

சாமி பார்க்க சென்றவன்
சாமியான கதை இது....
பூமி மறந்த மனிதனுக்கு
புத்தி சொலும் வழி இது.....

சாது மிரண்டால்
காடு கொள்ளாது
இது பழையது......
காடு மிரண்டால்
கடவுளும் நில்லாது
இது புதியது.....

தேடி தேடி
அழித்தவன் மனிதன்..
தேக்கி வைத்து
அழித்தது இயற்கை..

பிழைக்க கற்றுத் தந்த
இயற்கைக்கு
அழிக்க கற்றுத் தந்தவன்
மனிதன்.........

இனியாது உரைக்குமா ?
இயற்கையே கடவுள் என்று ......
இனியாது பிறக்குமா ?
இயற்கை அழிக்காத கைகள் ரெண்டு....

விதைத்தது களை
விழையுது பிழை
சிதைத்தது மழை
புதைந்தது விலை....

வெடித்தது மேகம்
குடித்தது தாகம்
கடித்தது உண்மை
கணத்தது என் மை......

எழுதியவர் : கவிஜி (2-Jul-13, 11:39 am)
பார்வை : 314

மேலே