பள்ளிக்குழந்தைகளே
துருதுருவென சிறகை விரிக்கும்
தும்பிக் கூட்டங்களே
துள்ளி விளையாடும்
முயல் குட்டிகளே .............
பூத்து மணம் வீசும்
முல்லை அரும்புகளே
படிப்பதற்கு பள்ளி செல்லும்
குழந்தை செல்வங்களே .............
பள்ளிபடிப்போடு சேர்ந்து
பகுத்தறிவையும் சேர்த்து படியுங்கள்
அறிவை நீங்கள் வளர்த்துக்கொள்ள
பெரியோர் அனுபவத்தையும் அதிகம் கேளுங்கள் ...
உன் வாழ்க்கை உன் கையில்
உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்
உயர்வு பெற வாழ்வில்
கல்வியை நன்கு கற்றுக்கொள்ளுங்கள் ............
கல்வி கற்று சிறப்பதாலே
உலகை வெல்லும் திறமை கிட்டும்
நல் அறிவு பெற்று வளர்வதனாலே
உலகை ஆளும் அனுபவம் கிட்டும் .............
ஒழுக்கம் அதனை உயிராய் கொண்டு
ஒழுக்கம் பேணி வளருங்கள்
உண்மையே நிரந்தரம் என்று
உறுதியோடு வாழுங்கள் ......
வேற்றுமை எண்ணம் இனியும் வேண்டாம்
ஒற்றுமை கொண்டு பழகுங்கள்
தோழமை கொண்டு தோழர்களாகி
தோள் கொடுத்து நில்லுங்கள் ...........
நம்மால் முடியுமென்று நம்பிக்கை கொண்டு
நாளும் நடை போடுங்கள்
நாளையை லட்சியத்தை நினைவில் கொண்டு
சாதிக்க நீங்களும் முயலுங்கள் ..........
பொறுமை கொள்ளுங்கள் பொறாமை வேண்டாம்
பெருந்தன்மையோடு வாழுங்கள்
வீம்புக்கு போகும் மனதை மாற்றி
விட்டுகொடுத்து வாழுங்கள் ................
சமூகத்தில் நிகழும் அவலம் ஒழிய
சத்தியத்தோடு வாழுங்கள்
உங்களால் முடியும் உலகை மாற்ற
ஒற்றுமையோடு சேருங்கள் .................
நாளைய உலகம் உங்கள் உலகம்
தன்னம்பிக்கையோடு வளருங்கள்
நாளைய இந்தியா ஒளிர்பெற்று திகழ
நீங்கள் இன்றே முயலுங்கள் ................