கோபம் வந்தது
கோபம் வந்தது
மருமகளுக்கு தீ மூட்டிய மாமியார்
தூக்கத்தில் நிம்மதியாய் உயிர் விட்டபோது
கோபம் வந்தது
குழந்தையில்லாமல் சிலர் குழம்பி தவிக்க
கொட்டமடித்த குமரிகள் குழந்தை பெற்று
குப்பையில் வீசியபோது
கோபம் வந்தது
முன்னால் காதலியின் முகத்துக்கு
அமிலம் வீசியவன் மனைவிக்கு
அழகான ஆண் குழந்தை பிறந்தபோது
கோபம் வந்தது
குழந்தை என்றும் பாராமல்
கற்பழித்தவன்
விசாரணையில் சாட்சி இல்லை என்று
விடுவிக்க பட்ட போது
கோபம் வந்தது ,கடவுளே உன் மீது கோபம் கோபமாய் வந்தது .